பசுந்தாள் உரவிதை விநியோகம்: பெற்று பயனடைய அழைப்பு

64பார்த்தது
பசுந்தாள் உரவிதை விநியோகம்: பெற்று பயனடைய அழைப்பு
திருவையாறு வட்டாரத்தில்
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்  கீழ் பசுந்தாள் உரவிதை விநியோகம் பெற்று பயனடைய அழைப்பு விடுத்து வட்டார

வேளாண்மை உதவி இயக்குநர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தற்போது விவசாயிகள்  மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் ஒரே பயிர்களைச் சாகுபடி செய்வதால் மண் வளம் குறைந்து கொண்டே வருகிறது. உற்பத்தி அதிகரிக்க அதிக அளவில் இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளம் குன்றியுள்ளது.

எனவே, மண்வளத்தைப் பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்க உயிர்மவேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்துவதற்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்  என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பசுந்தாள் உரவிதை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பசுந்தாள் உரப் பயிர்கள் மூலம் மண்வளம் பேணிக்காக்கப்பட்டு, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு, உயிர்ம முறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் வேளாண் விளைபொருட்களின் தரம் மேம்பட்டு, மக்களின் நலம் பேணிக்காக்கப்படும். சம்பா சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு பசுத்தாள் உரப் பயிர்கள் சாகுபடி செய்ய இதுவே சிறந்ததருணம் என்றார்

தொடர்புடைய செய்தி