சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா - 2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புஷ்பா - 2 திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகியுள்ளது. மும்பையில் உள்ள PVR சினிமாஸ் தியேட்டரில் முதல் நாள் காட்சிக்கு ஒரு டிக்கெட் விலை ரூ.3000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.