ரயிலில் ஏசி கோச்-களில் வழங்கப்படும் போர்வைகள் ஒரு மாதத்திற்கு ஒருமுறை துவைக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இது விவாதத்தை கிளப்பிய நிலையில் பயணிகள் பலரும் தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் வடக்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர், பயணிகளின் சுகாதார நலனைக் கருதி இனி 15 நாட்களுக்கு ஒரு முறை போர்வைகள் துவைக்கப்படும் என கூறியுள்ளார்.