திருக்காட்டுப்பள்ளி அருகே மேகலத்தூரில் தேர் பவனி விழா

65பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி அருகே மேகலத்தூரில் தேர் பவனி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருக்காட்டுப்பள்ளி அருகே மேகலத்தூரில் புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு 155 ஆம் ஆண்டு திருவிழா நடந்து வருகின்றது. இதில் கடந்த 19ஆம் தேதி மாலை 6: 30 மணி அளவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வேண்டுதல் தேர் பவனி நடந்து திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நாளான 27 ஆம் தேதி நேற்று இரவு ஆடம்பர தேர் பவனி வானவேடிக்கையுடன் நடந்தது.
அதைத் தொடர்ந்து இன்று திருவிழா நிறைவு திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை சூசை தேவநேசன், பங்கு மக்கள், விழா குழுவினர் வெகு விமர்சியாக மேற்கொண்டிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி