புதிய மின் இணைப்பு: முக்கிய அறிவிப்பு வெளியீடு

80பார்த்தது
புதிய மின் இணைப்பு: முக்கிய அறிவிப்பு வெளியீடு
புதிய மின்சார இணைப்பு வழங்கக் கோரி பயனர்கள் விண்ணப்பித்தால் 3 முதல் 7 நாட்களுக்குள் மின்இணைப்பு வழங்க வேண்டும் என அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சில பரிந்துரைகளின் படி ஒரு வாரத்துக்குள் மின் இணைப்பு வழங்க இன்று (மே 16) ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய மின்சார இணைப்புகள் பெற காலதாமதம் ஆவதாக புகார் எழுந்து வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி