எச்சரிக்கையை மீறி பேருந்தை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்

50பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ரயில்வே பாலத்தில் நேற்று (மே 15) பெய்த கன மழையால் சூழ்ந்திருந்த வெள்ளத்தில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ரவிக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாலத்தில் தண்ணீர் அதிகமாக இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் எச்சரித்தும் கேட்காமல் இயக்கியதால் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வள்ளியூரில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் அரசுப்பேருந்து சிக்கியதன் எதிரொலியாக, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி