வல்லம் ஆலக்குடி காட்டுவாரியில் சேதமடைந்த குழாய் மாற்றப்படுமா

79பார்த்தது
வல்லம் ஆலக்குடி காட்டுவாரியில் சேதமடைந்த குழாய் மாற்றப்படுமா
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே ஆலக்குடி
புதுஆற்றில் (கல்லணை கால்வாய்) இருந்து வண்ணாரப்பேட்டை வரை செல்லும் சில வாய்க்காலில் காட்டுவாரி வாய்க்கால் மேல் செல்லும் சேதமடைந்த பைப்பை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வல்லம் அருகே ஆலக்குடி புது ஆற்றில் இருந்து (கல்லணை கால்வாய்) ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை வரை 500க்கும் அதிகமான ஏக்கரில் பாசன வசதிக்காக சிஏ-3 வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் செல்லும் வழியில் காட்டு வாரி உள்ளது. இதனால் இந்த காட்டுவாரியின் மேல் ஆற்று நீரை கொண்டு செல்வதற்காக சிமென்ட் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் சேதமடைந்துள்ளது. இதனால் புதுஆற்று நீர் பாசன வயல்களுக்கு செல்வதை தவிர்த்து காட்டுவாரியில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் ஆலக்குடியில் காட்டுவாரியின் மேல் அமைக்கப்பட்டுள்ள குழாயை உடன் சீரமைக்க வேண்டும். இல்லையெனில் 500 ஏக்கர் பாசனம் பெறுவது கேள்விக் குறியாகிவிடும். மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே அதற்குள் ஆலக்குடி காட்டுவாரியின் மேல் உள்ள குழாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி