மின் இணைப்புகளை வீதப்பட்டி தவறாக பயன்படுத்தியவர்களிடமிருந்து ரூ. 71 ஆயிரத்து 543 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தஞ்சை மின் பகிர்வான மேற்பார்வை பொறியாளர் நளினி கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சை மின்பகிர்மான வட்டம் கும்பகோணம் கோட்டம் கும் பகோணம் நகர் உபகோட்டம் கிழக்கு கும்பகோணம் பிரிவு அலுவலகத்திற் குட்பட்ட பகுதிகளில் தஞ்சை மின்பகிர்மான வட்ட பொது செயற்பொறியாளர் விமலா தலைமையில் வட்ட கூட்டுக்குழு ஆய்வு நடந்தது.
அதில் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர், மேலும் அந்த கூட்டத்தில் 3 ஆயிரத்து 524 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 7 மின் இணைப்புகளில் வீதப்பட்டி தவறாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அபராத தொகை ரூ. 71 ஆயிரத்து 543 விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது