தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறத் தகுதியுள்ள மாணவர்களின் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்துள்ளதாவது: கெசட்டில்
அரசுப்பள்ளி மாணவர்கள் (தமிழ், ஆங்கில வழி), அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் (தமிழ்வழி மட்டும்) ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லும்போது, பட்டப் படிப்பு, டிப்ளமோ மற்றும் தொழிற்சாலை பயிற்சி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் படிப்புகளை படிக்க உதவியாக மாதம் ₹1000 ஊக்கத் தொகை வழங்கும் வகையில் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுள்ள மாணவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதுவரை ஆதார் எண் பெறாத மாணவர்கள் உடனடியாக ஆதார் எண் பெற்று உரிய பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், 10 வகையான அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக அஞ்சலக மற்றும் வங்கி கணக்கு எண், பான்கார்டு. பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 10 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.