உணவு பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்

71பார்த்தது
உணவு பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்
உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ. ஜி. ஜோஷி நிர்மல் குமார் உத்தரவுபடி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் திருச்சி மண்டல உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுறுத்தலின் படி தஞ்சை மாவட்டத்தில் உணவு பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்: 18005995950 அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, கும்பகோணம் பட்டுக்கோட்டை பஸ், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது. எனவே உணவு பொருட்கள் கடத்தல் குறித்து இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் தெரிவிப்பவர்களின் எண்கள் ரகசியமாக வைக்கப்படும் என தஞ்சை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி