அண்ணா பல்கலை. வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்துபட்டுள்ளார். பல்கலை., வளாகத்தில் சீனியர் மாணவருடன் பேசிக்கொண்டிருந்த மாணலியை 2 பேர் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 20 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த காவலாளிகள், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.