கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே 72 பேருடன் இன்று (டிச. 25) ரஷ்யா நோக்கி சென்றுகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. பனிமூட்டம் காரணமாக அக்டாவ் விமான நிலையத்துக்கு திசை மாற்றி விடப்பட்ட நிலையில் விபத்து நேர்ந்தது. விமானத்தில் இருந்தவர்களில் 37 பேர் அஜர்பைஜானை சேர்ந்தவர்கள் ஆவர், கஜகஸ்தானைச் சேர்ந்த 6 பேர், கிர்கிஸ்தானை சேர்ந்த 3 பேர் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 16 பேரும் இதில் அடக்கம்.