தஞ்சை ரயில் நிலையத்தில் ஏ. சி வசதி காத்திருப்பு அறை திறப்பு

63பார்த்தது
தஞ்சை ரயில் நிலையத்தில் ஏ. சி வசதி காத்திருப்பு அறை திறப்பு
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 21. 17 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், குளிர்சாதன வசதியுடன் கூடிய காத்திருப்போர் அறை கட்டுமானப் பணி நிறைவடைந்ததை
தொடர்ந்து திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம். எஸ். அன்பழகன் திறந்து வைத்தார். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அறையில் பயணிகள் வசதியாக ஓய்வு எடுக்கும் விதமாக அதிநவீன இருக்கைகள், ஆண்கள், பெண்களுக்கான கழிப்பறைகள், பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்பு அறை, சிற்றுண்டி உள்ளிட்ட உயர்தர சுகாதார வசதிகள் உள்ளன.

இந்த அறையில் பயணிகள் காத்திருக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ. 30-ம், உடைமைகளைப் பாதுகாக்க ரூ. 30-ம் கட்டணம் தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கச் செயலர் வெ. ஜீவக்குமார், பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் திருச்சி  பாலக்காடு ரயிலை தஞ்சாவூர் வரை நீட்டிக்க வேண்டும். தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கும், கும்பகோணத்துக்கும் பகல் நேரத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி