தமிழ்நாடு முழுவதும் காலநிலை மற்றும் மழையின் அளவை துல்லியமாக கண்காணித்திடும் பொருட்டு, 1, 400 தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 9 வட்டங்களிலும், 30 புதிய தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் 3 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் பிப். 20 செவ்வாய்க்கிழமை முதல் துவங்கப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்பட்டு ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.