திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காட்டில் உள்ள
தனியார் திருமண மண்டபத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் மின்சார வாரியம், மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சிநிர்வாகம், உள்ளிட்ட அரசு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். அசோக்குமார் எம். எல். ஏ, மாவட்ட உள்ள ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் மூர்த்தி, பேராவூரணி ஒன்றியக்குழுத் தலைவர் சசிகலா ரவிசங்கர், பட்டுக்கோட்டை ஆர். டி. ஓ. ஜெயஸ்ரீ, பேராவூரணி ஒன்றிய ஆணையர்கள் செல்வேந்திரன், சாமிநாதன், ஒன்றியக் குழு துணை தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாக்கியம் முத்துவேல், அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர்கள் சிவசம்மாள் ராமராஜ் (புனல்வாசல்), ராஜாக்கண்ணு (ஒட்டங்காடு), சுந்தர்ராஜன் (கல்லூரணிக்காடு), ஊராட்சி செயலர்கள் பழனிவேல், கலைஞானம், சத்யராஜ் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.