திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் சங்கரி, கடந்த 9ஆம் தேதி வீட்டு பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்துள்ளார். அப்போது அதில், 25 சவரன் நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கரி, திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சங்கரி வீட்டில் வேலை செய்த மல்லிகா என்ற பெண் நகைகளை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து அவரையும், திருட்டுக்கு உடந்தையாக இருந்த அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.