பட்டுக்கோட்டை - Pattukottai

சுகாதார சீர்கேட்டில் பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்கால்

சுகாதார சீர்கேட்டில் பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்கால்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் ஆனந்தவல்லி என்னும் கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால், உள்ளது இந்த வாய்க்கால், ஆவணம் அருகே கல்லணைக் கால்வாயின் பிரதான வாய்க்காலில் இருந்து, கிளை வாய்க்காலாக பிரிந்து மாவடுகுறிச்சி, பொன்காடு, பேராவூரணி, செங்கொல்லை, நாட்டாணிக்கோட்டை வழியாக கொரட்டூர் ஏரியில் சென்று சேர்கிறது.  இந்நிலையில், பேராவூரணி நகர் பகுதியில் ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைகள் ஆனந்தவல்லி வாய்க்காலின் உள்புறத்தில் கொட்டப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும், பழைய பேருந்து நிலையம் முதல் நாட்டாணிக்கோட்டை வரை குடியிருப்போர் தங்கள் வீடுகளின் கழிவு நீரை குழாய் பதித்து ஆனந்தவல்லி வாய்க்காலில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் ஆனந்தவல்லி வாய்க்கால், கழிவுநீர் சாக்கடை வாய்க்காலாக மாறி வருகிறது.  மேலும், வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் உடைந்தும், பக்கவாட்டு சுவர், படிக்கட்டுகள் சேதம் அடைந்தும் உள்ளது.   எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் உரிய மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவும், ஆனந்தவல்லி வாய்க்காலில் குவிந்து கிடக்கும் நெகிழிக் கழிவுகளை அகற்றவும், சாக்கடை கழிவு நீர் விடாமல் தடுக்கவும், குப்பைகளை கொட்டுவோர், கழிவு நீர் விடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా