உக்கடை ஊராட்சியில், நூறு நாள் வேலை கேட்டு கோரிக்கை மனு

52பார்த்தது
உக்கடை ஊராட்சியில், நூறு நாள் வேலை கேட்டு கோரிக்கை மனு
தஞ்சாவூர் மாவட்டம், , உக்கடை ஊராட்சியில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான நூறு நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக துவங்கி, வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, உக்கடை கிராம ஊராட்சிச் செயலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாலமுருகன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் கே. பக்கிரிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் மயில்வாகனன் மற்றும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி