அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஹிந்தியை ஏற்றுக்கொண்டால் தான் நிதி என்று மத்திய அமைச்சர் கூறியதை இபிஎஸ் கண்டிக்காதது ஏன்?. இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்வாரா?. தனிப்பட்ட பிரச்னையைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்னையாக பேசும் இபிஎஸ், தற்போது எங்கே பதுங்கியுள்ளார்?” என குறிப்பிட்டுள்ளார்.