பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘ஒன்றுக்கும் உதவாத துறை அறநிலையத்துறை’ என கூறியது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், “பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்கின்ற அண்ணாமலையின் கூற்றை, தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். ஆன்மிகத்தில் அரசியலை கலந்து ஆதாயம் அடைய நினைக்கும் கபடநாடகம், தமிழகத்தில் எடுபடாது” என பதிலடி கொடுத்துள்ளார்.