டெல்லியில், குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான ஒரு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதத்தில், “கடந்த 2020 முதல் காணாமல்போன சுமார் 3 லட்சம் குழந்தைகளில் பெரும்பாலானோரை மத்திய, மாநில போலீசார் கண்டுபிடித்து விட்டனர். இருந்தபோதிலும் 36ஆயிரம் குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் அதிகபட்சமாக 58,665 பேர் ம.பி.,யை சேர்ந்தவர்கள், இவர்களில் 45,585 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 3,955 பேரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை” என்ற தகவல் முன்வைக்கப்பட்டது.