சென்னை கிண்டியில் இளம் பெண் ஒருவர் மீது சரக்கு வாகனம் மோதிய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சண்முக ரம்யா என்ற பெண், கிண்டி காவல் நிலையம் அருகே தொழிற்பேட்டையில் நடந்து சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சண்முக ரம்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார்.