நடிகர் அஜித்துடன் நடிக்க வேண்டிய வாய்ப்பை தவறவிட்டேன் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இதை தெரிவித்தார். விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தது போல அஜித்துடன் இணைந்து எப்போது நடிப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "ஒரு படத்தில் அது நடக்காமல் போனது, அது என்ன படம் என சொல்ல விரும்பவில்லை" என்றார்.