பிரேசிலில் உள்ள அனபோலிஸ் நகரில், பெண் ஒருவர் கடையில் ஷாப்பிங் செய்துகொண்டு இருந்தார். அப்போது, அவரது பின் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து, தீப்பற்றியது. இதில், அந்த பெண்ணிற்கு பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து அவரது கணவர் கூறுகையில், “இட்ந்த சம்பவம் எனது மனைவிக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது” என தெரிவித்துள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.