பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 19வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 24ஆம் தேதி விடுவிக்க உள்ளார். பீகார் மாநிலம்பாகல்பூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு தவணை தொகை வழங்கி தொடங்கி வைக்கிறார். 9.7 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புவோர் முன்பதிவு செய்யலாம்.