திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது. இங்கு கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 10ம் தேதியும், தேரோட்டம் 11ம் தேதியும் நடந்தது. நேற்று தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று கோயிலில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ரொக்க பணமாக ரூ.3 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 776, தங்கம் 557 கிராம், வெள்ளி 21,235 கிராம், வெளிநாட்டு கரன்சி 1,153 ஆகியவை காணிக்கையாக கிடைத்தன.