பாபநாசம் 108 சிவாலயத்தில்  மகா சிவராத்திரி விழா

546பார்த்தது
பாபநாசம் 108 சிவாலயத்தில்  மகா சிவராத்திரி விழா
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் 108  ராமலிங்க சுவாமி திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் 108 முறை கோவிலை சுற்றி வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர் இந்தக் கோவிலில் எல்லா சன்னதிகளையும் தரிசனம் செய்துவிட்டு 108 வது லிங்கமான அனுமந்த லிங்கத்தை தரிசனம் செய்தால் 108 சிவாலயங்களை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பதாலும்  மகா சிவராத்திரியில் இந்த கோவிலில் வந்து வழிபட்டால் அவர்கள் எண்ணிய காரியம் நிரைவேறும் என்பது ஐதீகம் அதனால் இந்த கோவிலில் மகா சிவராத்திரி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  விடிய விடிய 108 முறை வலம் வந்து  சாமி தரிசனம் செய்து வழிபட்டனர் மகா சிவராத்திரி விழாவிக்கான  ஏற்பாட்டுகளை கோவில் செயல் அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் லட்சுமி, கணக்கர், கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் பணியாளர்கள் கிராமவாசிகள் செய்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி