தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படும் என பாபநாசம் தோட்டக் கலை உதவி இயக்குனர் வினோதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. -பிரதம மந்திரி நுண்ணீர் பாசனம் 2024-25-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைத்து கொடுப்பதற்கு தோட்டக்கலைத் துறைக்கு நிதி ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் பாபநாசம், அம்மாப்பேட்டை மற்றும் திருவையாறு வட்டாரங்களுக்கு முறையே ரூ. 13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சொட்டு நீர் பாசனம் அமைப்பதன்மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. இத் திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறலாம். இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், புகைப்படம், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், நில வரைப்படம் (எப். எம். பி). சிறுகுறு விவசாயிகள் சான்று போன்ற ஆவணங்களுடன் பாபநாசம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.