பாபநாசம் அருகே ரயிலில் அடிபட்டு பிளம்பர் பலி

7130பார்த்தது
பாபநாசம் அருகே ரயிலில் அடிபட்டு பிளம்பர் பலி
பாபநாசம் அரையபுரம் கேட்டு தெருவை சேர்ந்தவர் அறிவழகன் வயது 40, பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளானர். இவருக்கு காது சரியாக கேட்காதவர் எனகூறப்படுகிறது. இந்நிலையில் உடல் நலம் சரி இல்லாமல் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மாமனாரை பார்க்க சென்று விட்டு இரவு அரையபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு ரயில்பாதை வழியாக செல்லும் போது தண்டவாளத்தை கடக்க முற்பட்டு அப்போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு  இறந்து விட்டார். இறந்த அவரது உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி