ஒரத்தநாடு - Orathanadu

தஞ்சை: நல்ல லாபம் பெற கேழ்வரகு சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

தஞ்சை: நல்ல லாபம் பெற கேழ்வரகு சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

கேழ்வரகு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு சிறந்த லாபம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேழ்வரகு பயிரிட ஏற்ற பட்டம்: ஆடி மற்றும் புரட்டாசி பட்டம், ரகங்கள்: கோ 9, 13, கோ (ரா) 14, கோ 15. நிலம் தயாரித்தல்: நிலத்தை இரண்டு முறை நன்கு உழவு செய்த பின்பு மூன்றாவது உழவில் தொழுஉரம் இட வேண்டும். விதை நேர்த்தி: பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊற வைத்து உலர்த்திய பின் விதைக்க வேண்டும். நாற்றங்கால் விதைப்பு: நாற்றங்கால் முறை யில் பயிரிட ஹெக்டருக்கு 5 கிலோ விதையளவும், நேரடி விதைப்பிற்கு 10 முதல் 15 கிலோ விதையளவும் தேவைப்படுகின்றன. நடவு: 18 முதல் 21 நாட்கள் வயதுடைய நாற்றுகளை குத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாற்றுகள் நடவு செய்யலாம். உர நிர்வாகம் மற்றும் நுண்ணுயிர் உரங்கள்: பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை, மணி, சாம்பல் சத்துக்களை ஹெக்டருக்கு முறையே 90: 45: 45 கிலோ இடவேண்டும். 10 பொட்டலம் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியத்தை மக்கிய தொழுஉரத்துடன் கலந்து ஒரு ஹெக்டர் நிலத்தில் பரப்பலாம். இறவையில் 5 பாக்கெட் அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஹெக்டருக்குத் தேவையான நாற்றுக்களை 15- 30 நிமிடம், வேர் மூழ்கும்படி நனைத்து நடவு செய்யலாம். கதிர்கள் நன்கு முற்றி காய்ந்த பிறகு அறுவடை செய்யலாம்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా