ராணுவ வீரர்களுக்குப் பெரிய சம்பளம் இருக்கும் என்று அனைவருமே நினைத்திருப்போம். அச்சிந்தனையை மாற்றியுள்ளது அமரன். படத்தில் சொத்து வாங்கும் காட்சி ஒன்று இடம் பெற்று, ராணுவத்தினரின் கஷ்டத்தை வெளிக்காட்டியுள்ளது. இக்காட்சியை மேற்கோள் காட்டிய விக்னேஷ் சிவன், ராணுவ வீரர்களின் சம்பளம் 100 மடங்கு அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, அதற்கு முதல் ஆளாக பங்களிக்க காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.