ஒரத்தநாடு - Orathanadu

ஒரத்தநாடு அருகே மரக்கிளை விழுந்து தொழிலாளி பலி

ஒரத்தநாடு அருகே மரக்கிளை விழுந்து தொழிலாளி பலி

ஒரத்தநாடு அருகே நடுவூர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் மகேந்திரன். இவரது வீட்டின் அருகே இருந்த புளியமரத்தை வெட்டுவதற்காக கந்தர்வக்கோட்டையை அடுத்த இன்னான்விடுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (45) என்பவர் உள்ளிட்ட சிலர் ஈடுபட்டனர்.  இந்நிலையில் நேற்று மரத்தை வெட்டும் போது, அதன் கிளை ஒன்று கீழே நின்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி மீது விழுந்தது. இதில் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி அதே இடத்தில் இறந்தார்.  தகவலறிந்த தஞ்சை தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా