காட்டாத்தி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பேருந்து பயணிகள் வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே அதனை முற்றிலுமாக இடித்து அகற்றிவிட்டு, புதிய பேருந்து நிறுத்தம் கட்டித் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.