ரெகுநாதபுரம் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயம் திருவிழா

85பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, நெடுந்திரு ரெகுநாதபுரம்  கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும்
சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நெடுஞ்சாலை ரெகுநாதபுரம் அம்பலக்கார தெரு கிராமவாசிகள், நாட்டாமைகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தார்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி