கும்பகோணம்: புதிய பஸ் நிலைய வியாபாரிகள் நலச்சங்க சார்பில் ஆர்ப்பாட்டம்

60பார்த்தது
கும்பகோணத்தில் புதிய பஸ் நிலைய இடமாற்ற தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி கும்பகோணம் புதிய பஸ் நிலைய வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. 

கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நடைபெற்ற கும்பகோணம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கும்பகோணம் நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையம் இடமாற்றம் செய்ய உள்ளதாக தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி கும்பகோணம் புதிய பஸ் நிலைய வியாபாரிகள் நல சங்கத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். அதில் ஒரு பகுதியாக கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மாலை அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்திற்கு இதன் தலைவர் மாணிக்கம், தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்மாறன், பொருளாளர் கார்த்திகேயன், துணைத் தலைவர் கோவிந்தராஜன், செயலாளர் சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்துக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தீர்மானத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி