பொது இடங்களில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்த இனிமேல் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்போரூரில் நாதக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வேண்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். மேலும், இனி பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக கட்டணத்தை நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.