கும்பகோணத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பேட்டி

50பார்த்தது
ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்பாள் சன்னதிகளில் அமர்ந்து தியானம் செய்து சுவாமியை வழிபட்டார். பிறகு, கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள கும்பமுனி எனும் அகஸ்தியர் சன்னதியில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பிறகு, கோவிலில் வெளியே நின்ற கும்பகோணம் சாஸ்திர பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆந்திர மாணவர், மாணவிகளுடன் காரில் நின்றவாறு செல்பி எடுத்துக்கொண்டார். 

பிறகு அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சென்ற பவன் கல்யாண், தனி விமானம் மூலம் திருச்செந்தூர், மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், இன்று(14ம் தேதி) பழனி, பழமுதிர்சோலை, நாளை(15ம் தேதி) திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தனது பயணத்தை முடித்துக் கொள்கிறார். இந்நிலையில், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பவன்கல்யாண் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முருகன் கோவில்கள், அகஸ்தியர் சன்னதிகளில் தரிசனம் செய்ய நினைத்துக்கொண்டிருந்தேன். தற்போது தான் வாய்ப்பு கிடைத்தது. 

கேரளாவிற்கு சென்று, கும்பகோணத்தில், சிவன் மற்றும் அகஸ்தியர் சன்னதியில் தரிசித்து ஆசிர்வாதம் வாங்கினேன். இது சனாதன தர்ம யாத்திரை அல்ல. அப்படி செல்ல வேண்டுமானால், அறிவித்து விட்டு தான் வருவேன். கோவிலுக்குள் அரசியல் பேசக் கூடாது. வெளியில் தான் பேச வேண்டும். எல்லோரும் நலமாக இருப்போம் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி