சென்னையில் கடந்த 3 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு 10,880 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த வருடம் தங்கத்தின் விலை 10-15 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விகிதத்தில் விலை உயர்ந்தால், டிசம்பர் 2025க்குள் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10,100 முதல் ரூ.10,600 வரை இருக்கும். இந்த வருட இறுதியில் சவரன் ரூ.90 ஆயிரத்தை தொடவும் வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.