மருத்துவச் செலவிற்கு கொண்டு சென்ற ரூ. 51 ஆயிரம் பறிமுதல்

1555பார்த்தது
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் சோலைசேரி விலக்கில் நிலையான கண்காணிப்பு அலுவலர் முருகேசன் , தலைமையில்  தேர்தல் பறக்கும் படையினர்  இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே காரில்  இராஜபாளையம் இருந்து கோவில்பட்டி வந்த ஆர் எஸ்ஏ நகர் கரையிருப்பு தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் மாரிமுத்து  (34)  கைப்பையில்   ரூ. 51,000 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முறையான ஆவணம் இல்லாததால் அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அவர் மருத்துவ செலவிற்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 51, 000 நிலையான கண்காணிப்பு அலுவலர் முருகேசன், காவலர்கள் வெள்ளத்துரை, திரவிக் கண்ணன், லெட்சுமணன் ஆகியோர் தாசில்தார் ரவிக்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் ரவி கணேஷ் ஆகியோரிடம்  ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி