தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள புகழ் பெற்ற ஆரியங்காவு கருப்பசாமி அம்மா சக்தி மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நேற்று (செப்.17) இரவு நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் இருந்து அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலாவும் விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி திடலில் பூ இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.