பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

568பார்த்தது
பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
தமிழக கேரள எல்லையான புளியரை அருகே வனப்பகுதியில் இயற்கையில் கொஞ்சும் பகுதியில் பாலருவி அமைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நீர் வரத்து இன்றி மூடப்பட்டிருந்த பாலருவி நேற்று (06.06.2024) முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பாலருவியில் குளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி