நர்சிங் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கல்லூரிக்கு 'சீல்' வைப்பு

79பார்த்தது
நர்சிங் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கல்லூரிக்கு 'சீல்' வைப்பு
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தை சேர்ந்த வினோத்குமார், பாவூர்சத்திரம் மின்வாரிய காலணியில் குடியிருந்து வருகிறார். தென்காசி - நெல்லை சாலையில் அரசு மகளிர் பள்ளி எதிரே டிப்ளமோ நர்ஸிங் பாரா மெடிக்கல் கல்லூரி நடத்தி வருகிறார் வினோத்குமார். இங்கு 80க்கும் மேற்பட்ட மாணவிகள் டிப்ளமோ நர்சிங், லேப் டெக்னிஷியன் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு படித்து வரும் ஒரு மாணவியிடம் வினோத்குமார் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், வினோத்குமாரை கைது செய்தனர். அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளைங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் அனிதா மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி கல்லூரிக்கு இரவோடு இரவாக சீல் வைத்தனர்.

மேலும் கல்லூரியில் படித்த மாணவிகளின் படிப்புகளை தொடர வேறு கல்லூரிக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரித்தனர்.

டேக்ஸ் :