தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை அதிரடி!

79பார்த்தது
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை அதிரடி!
தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வரும் 14ம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்து ஆணையர், "வெளி மாநில பதிவெண்ணுடன் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் பயணித்து விபத்து ஏற்படும் போது அதற்கு அரசு பொறுப்பேற்காது. முறையற்ற வகையில் வெளிமாநிலத்தில் பதிவு செய்து இயங்கும் ஆம்னி பேருந்துகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி