சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் தமிழ் தேர்வு கட்டாயம்

75பார்த்தது
சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் தமிழ் தேர்வு கட்டாயம்
சிறுபான்மை மொழி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் தேர்வு கட்டாயமாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மொழி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளதால் 10ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் தமிழ் தேர்வு எழுத வேண்டும்.

தொடர்புடைய செய்தி