மத்தியப்பிரதேச மாநிலம் உத்வட் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் நேற்று (டிச.23) நடந்த கணித தேர்வில் செல்போனை பார்த்து எழுதியுள்ளார். இதனை பார்த்த ஆசிரியர் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், வேறு ஒரு விடைத்தாள் கொடுத்து எழுத சொல்லியுள்ளார். பின்னர் தேர்வு முடிந்து வீட்டிற்கு சென்ற அந்த மாணவன் இதனை நினைத்து கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.