வேகமாக மோதிய கார்: தூக்கி வீசப்பட்ட சிறுமி (வீடியோ)

73பார்த்தது
மத்திய பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதியன்று அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆபேதுல்லாகஞ்ச் அர்ஜுன் நகர் பாலம் சர்வீஸ் சாலையில் சிறுமி ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. விபத்தின் தீவிரம் காரணமாக சிறுமி காற்றில் பறந்து கீழே விழுந்தார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் உயிர் தப்பியது. விபத்து நடந்தவுடன் கார் டிரைவர் தப்பியோடிவிட்டார். CCTV காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி