எந்த ஒரு மாணவியும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (டிச., 27) செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு அண்ணா பல்கலை., உயர்கல்வித்துறை முழு ஒத்துழைப்பு தருகின்றன. படிப்பினையாக கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.