சிவகங்கை: கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஆட்சியர் தகவல்

79பார்த்தது
சிவகங்கை: கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஆட்சியர் தகவல்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் வருகின்ற 01.04.2025 முதல் 08.06.2025 வரையிலான காலங்களில் சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்க பகுதியில் (நீச்சல் குளம்) நடைபெறவுள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும், நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற வரும் சிறுவர்கள் குறைந்தபட்ச 4 அடி (120 செ.மீ) உயரம் இருத்தல் வேண்டும். 

இப்பயிற்சி பெறுவதற்கு 12 நாட்களுக்கு ஒரு வேளை (1 மணி நேரம்) பயிற்சிக்கு ரூ.1,500/- + (18% ஜி.எஸ்.டி) தொகை கட்டணம் ஆகும். இத்தொகையினை போன்பே, ஜிபே, டெபிட் கார்டு மூலம் பி.ஓ.எஸ் மெஷின் வழியாக செலுத்த இயலும். இப்பயிற்சி முகாமானது, வருகின்ற 01.04.2025 முதல் 13.04.2025 வரையும், 15.04.2025 முதல் 27.04.2025 வரையும், 29.04.2025 முதல் 11.05.2025 வரையும், 13.05.2025 முதல் 25.05.2025 வரையும், 27.05.2025 முதல் 08.06.2025 வரையும் என 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி