இரணியூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

70பார்த்தது
சிவகங்கை அருகே உள்ள இரணியூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இரணியூர் இராணி அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 18 காளைகளும், 162 மாடுபிடி வீரர்களும் இதில் கலந்து கொண்டனர். வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே, வடத்தால் கட்டப்பட்ட காளைகளை 20 நிமிடங்களில் 9 வீரர்கள் கொண்ட குழு அடக்க போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப் பரிசும், கேடயமும் வழங்கப்பட்டன மாடு முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
இப்போட்டியினை உடவயல், சூரவத்தி, விசயமாணிக்கம், சாத்தணி, இலுப்பக்கோட்டை, குருக்கத்தி, பெரியகிளுவச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த விறுவிறுப்பான போட்டியை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி