சிரித்து பேசிய அடுத்த நொடி மரணம்.. அதிர்ச்சி வீடியோ

69பார்த்தது
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள தனது கல்லூரியில் வர்ஷா கரத் (20) என்ற மாணவி ஃபேர்வெல் நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், மயங்கி விழுவதற்கு சில நொடிகளுக்கு முன் அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்திருந்தார். பின்னர் பேச ஆரம்பித்த அவர் மயங்கி விழுந்தார். அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி